ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரான கண்டூஸை தலீபான்கள் கைப்பற்றியதாக தகவல்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலீபான் தீவிரவாதிகள் போரிட்டு வருகிறார்கள். ஒடுக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள், நேட்டோ படைகள் வெளியேறியதும் மீண்டும் தங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளனர்.

அந்த நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான கண்டூசை கைப்பற்றுவதற்காக, தீவிரவாதிகள் 3 வழிகளில் அதிரடி தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 3 லட்சம் மக்கள் வசிக்கும் அந்த நகருக்குள் நுழைந்த தீவிரவாதிகள் முக்கிய சதுக்கத்தில் தங்களின் வெள்ளைக்கொடியை நாட்டி உள்ளனர். இது அந்த நகர கவர்னர் அலுவலகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில்தான் உள்ளது.

நகரின் பெரும்பாலான பகுதிகளை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையத்துக்கு தப்பிச் சென்ற துணை கவர்னர் அப்துல்லா தனிஷி இந்த தகவலை உறுதி செய்தார். ஒரு பிரிவு தீவிரவாதிகள் அங்குள்ள சிறைக்குள் புகுந்து போலீசாரை தாக்கி, கைதிகளை விடுவித்தனர்.

-http://www.athirvu.com