இணையத்தில் வரும் செய்திகளை நம்பாதீர்: அமெரிக்காவில் மலேசிய மாணவர்களிடம் பிரதமர் அறிவுறுத்து

nyவலைப்பதிவுகளையும்  இணையச்  செய்தித்  தளங்களையும்  நம்பி  விட  வேண்டாம்  என  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அமெரிக்காவில்  பயிலும்  மலேசிய  மாணவர்களிடம்  வலியுறுத்தினார்.

“வலைப்பதிவுகள்  அல்லது  இணைய  செய்தித்  தளங்களில்  இடம்பெறும்  எல்லாவற்றையும்  நம்பக்  கூடாது. அவற்றில்  இடம்பெறும்  பெரும்பாலான  செய்திகள்  வீண்  வதந்திகள்  அல்லது  நிரூபிக்கப்படாத  வெற்றுக்  குற்றச்சாட்டுகள்”, என்றாரவர்.  பிரதமர்  நஜிப்  நேற்று  நியூ  யோர்கில்  மலேசிய தூதரகத்தில்  நடைபெற்ற  நிகழ்வு  ஒன்றில்  பேசினார்.