அமெரிக்க டாலருக்கு இவ்வளவுதான் ரிங்கிட் என நிர்ணயம் செய்வது அவசியமற்றது என பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ் கூறினார்.
டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு மிக மோசமாக சரிந்து வரும் வேளையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கோலாலும்பூரில், மலேசியா-ஓஇசிடி உயர்-நிலை கருத்தரங்கில் உரையாற்றியபோது ஸெட்டி இதனைத் தெரிவித்தார்.
நடப்பு நாணய மாற்று வீதம் வருமாறு: ஒரு யுஎஸ் டாலருக்கு ரிம4.44