ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடங்கிய ரஷ்யா: அதிரடி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

obama_putin_001சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிராவத முகாம்கள் மீது ரஷ்யா முதன் முறையாக வான்வழி தாக்குதல் தொடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து அந்நாட்டிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை அமெரிக்க அதிபரான ஒபாமாவை சந்தித்த ரஷ்ய அதிபர் புடின், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று சிரியாவில் உள்ள ஐ.எஸ் முகாம்கள் நோக்கி பறந்த ரஷ்ய ராணுவ விமானங்கள் சுமார் 10 முறை வான்வெழி தாக்குதலை தொடங்கியுள்ளது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலை கண்டித்து அமெரிக்க நாட்டின் வெளியுறவு செயலாளரான ஜான் கெரி உடனடிகாக கண்டன அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

அதில், ஐ.எஸ் தீவிரவாதிகளை தாக்குவதற்கு பதிலாக சிரியா நாட்டின் ராணுவங்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது ரஷ்யா விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள தகவலில் ரஷ்ய விமானங்களின் தாக்குதலுக்கு இதுவரை 33 அப்பாவி குடிமக்கள் பலியாகியுள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைக்கொண்டுள்ள பகுதிகளை விட்டு பிற பகுதிகளில் தாக்குதல் நடத்துவதால் சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தம் மேலும் தீவிரமடைந்து மோசமான விளைவுகளுக்கு கொண்டு செல்லும் என ஜான் கெரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் கண்டனத்திற்கு பதிலளித்த ரஷ்யா, தங்கள் நாட்டு விமானம் சரியான இலக்கை தான் தாக்கிவருவதாகவும், இந்த வான்வழி தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என தகவல் வெளியிட்டுள்ளது.

http://world.lankasri.com