அணுகுண்டிலும் அழியாமல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா வந்த அதிசய மரம்!

japan_bonsaitree_001ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது.

தற்போது உலகின் கவனத்தையே தன்பால் ஈர்த்துள்ளது. ஆனாலும் 2001 ம் ஆண்டு வரை அது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியம்.

இந்த மரம் ஓங்கி வளர்ந்த பெருமரம் இல்லை. ஜப்பானியர்களை போலவே குட்டைதன்மை கொண்டது. இதன் தோற்றம் பார்க்க காளான் போல் உள்ளது.

இதனுடைய நடுப்பகுதி மரம் 1.5 அடி விட்டம் கொண்ட சிறிய மரம்.

இந்த குறைகளே 4 வது நூற்றாண்டை கடக்க இருக்கும் இந்த மரத்துக்கு நிறைகளாக அமைந்துள்ளதா என்பது ஆராயக்கூடியது.

அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் போது, 1945, ஆகஸ்ட் 6 ம் திகதி ஜப்பானின் ஹிரோஷிமா மீது லிட்டில் பாய்(Little Boy) அணுகுண்டை வீசியது.

அப்போது, குண்டு விழுந்த இடத்துக்கு இரண்டு 2 கி.மீ. தூரத்திலேயே இந்த வெள்ளை பைன் மரம் இருந்தது.

குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து பல மைல் தூரத்தில் இருந்தவர்கள் பெரும்பாதிப்பிலிருந்து தப்பினார்கள். ஆனால், 2 கி.மீ. தூரத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகி அழிந்த பகுதியில் இருந்த இந்த மரம் சேதமில்லாமல் தப்பியது பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

மரத்தின் உயரத்துக்கு சுற்றுச்சுவர் மறைத்திருந்தாலும் வெளியில் கிளைகள் தெரிந்தபடியே இருந்தது. ஆனாலும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படவில்லை.

இந்த ஜப்பானிய வெள்ளை பைன் மரம், மற்றும் 53 சேகரிப்புகளும்(Specimen) போன்சாய் ஆசிரியர் மாசறு யமகி என்பவரால், அமெரிக்காவின் தேசிய இருநூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1976 ம் ஆண்டு அருங்காட்சியத்திற்கு வழங்கப்பட்டது.

ஆர்போரேட்டம் தேசிய போன்சாய் மற்றும் பெஞ்சிங் மியூசியத்தில் ஒரு ஒரு சிறந்த சேகரிப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 8, 2001 வரை அதன் சிறப்பு ஒருவருக்கும் தெரியவில்லை. பிறகு, அங்கு வந்த இரண்டு ஜப்பானிய சகோதரர்கள் தங்களது தாத்தா தந்த மரத்தை பற்றிய சிறப்புகளை தெரியப்படுத்தினர்.

”விலை மதிப்பற்ற போன்சாய் மரத்தை எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அடிப்படையில் எதிரியாக இருந்த அமெரிக்காவிற்கு, மாசறு யமகி நன்கொடையாக அளித்துள்ளது ஆச்சரியமானது.

அதைப் போற்றுவதற்கு வார்த்தையில்லை” என்று லாப நோக்கமற்ற தேசிய போன்சாய் அறக்கட்டளை தலைவர் பெலிக்ஸ் லாப்லின் உணர்ச்சி பொங்க கூறினார்.

வாஷிங்டனில் உள்ள தேசிய ஆர்போரேட்டத்திற்கு, யமகி இந்த மரத்தை கொடுத்தபோது, ஏன் இந்த மரத்தை பற்றிய ரகசியத்தை சொல்ல விரும்பவில்லை என்பது, இன்னும் புரியாத புதிராக அவர்களுக்கு இருக்கிறது.

”இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்”

என்ற திருக்குறள் வரிகள் தரும் சிந்தனை யமகிக்குள்ளும் இருந்திருப்பதையே இந்த செயல் காட்டுகிறது.

400 வருடங்களுக்கு முன் இந்த மரத்தை ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து வளர்த்தவர்கள் இருந்திருப்பார்கள். ஆனால், பல தலைமுறைகளையே பார்த்துவிட்டது இந்த போன்சாயி மரம்.

-http://world.lankasri.com