சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத், ஆச்சரியப்படும் விதமாக மாஸ்கோவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அதிபர் விளாடிமிர் புடீனை சந்தித்துள்ளார்.
சிரியாவில் 2011-இல் மோதல் வெடித்த பின்னர் முதல் தடவையாக அவர் நாட்டுக்கு வெளியில் செல்கின்றார்.
கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடத்தி ரஷ்யா வழங்கும் ஒத்துழைப்புக்காக அஸ்ஸத் நன்றி கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளையே இலக்கு வைப்பதாக ரஷ்யா கூறினாலும், மேற்குலகின் ஆதரவுள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்குக்கு எதிராகவும், ஐஎஸ் ஆயுததாரிகளுக்கு எதிராகவும் சிரியா நடத்தும் தாக்குதல்களுக்கு ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் உதவிவருகின்றன. -BBC
சிரியாவின் அதிபர் ரஷ்யாவுக்கு திடீர் விஜயம்; புடினுக்கு நன்றி தெரிவிப்பு
சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத், ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்துவதற்காக திடீரென மாஸ்கோ சென்றுள்ளார்.
சிரியாவில் மோதல்கள் தொடங்கிய பிறகு முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் அஸ்ஸத், சிரியாவில் தனது பலத்தை அதிகரிக்க உதவிய ரஷ்யாவின் சமீபத்திய ராணுவ தாக்குதல்களுக்கு பெரும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இராணுவ உதவி இல்லாமல் போயிருந்தால், சிரியாவில் மேலும் பல பகுதிகளுக்கு பயங்கரவாதம் பரவியிருக்கும் என்றும் அதிபர் அஸ்ஸத் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று மாலை இவ்விரு தலைவர்களின் சந்திப்பின்போது பேசிய ரஷ்ய அதிபர் புடின், சிரியாவில் நிலவும் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு உதவுவதைத் தாண்டி, சிரியாவின் அரசியல் நெருக்கடிக்கும் தீர்வு காணவும் ரஷ்யா உதவும் என்று தெரிவித்துள்ளார். -BBC
அமெரிக்காவின் கனவு மண்ணாகிப் போனது.