டன் கணக்கில் போதை மருத்துடன் பிடிபட்ட சவுதி இளவரசர்: தந்திரமாக சிக்க வைத்த சுங்க அதிகாரிகள்

saudi_prince_005லெபனான் நாட்டில் இருந்து போதை மருந்து பெட்டிகளை கடந்த முயன்ற சவுதி இளவரசரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி இளவரசர்களில் ஒருவரான Abdul Mohsen Bin Walid தமது தொழில் தொடர்பான சந்திப்புகளுக்காக லெபனான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்திப்புகளை முடித்துக்கொண்டு தமது சொந்த விமானத்தில் சவுதி திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளனர்.

அப்போது லெபனான் சுங்க அதிகாரிகள் இளவரசரின் விமானத்தை சோதனையிட வேண்டும் என கோரியுள்ளனர்.

இதனையடுத்து சோதனையிட்ட சுங்க அதிகாரிகள், விமானத்தினுள் பெட்டி பெட்டியாக ஆம்ஃபிட்டமின் எனும் போதை மருந்து மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

40 பெட்டிகளிலாக பதுக்கி வைத்திருந்த அந்த போதை மருந்துகளின் மொத்த எடை 2 டன்கள் இருக்கும் என லெபனான் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதை மருந்து கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இளவரசருடன் அவருக்கு உதவி செய்த மேலும் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற ஒரு கடத்தல் சதி திட்டத்தை முறியடித்திருப்பது லெபனான் வரலாற்றிலேயே இதுவே முதன் முறையென சுங்க அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com