உலகளவில் பலம் வாய்ந்த 10 நபர்களின் பட்டியல்: முதலிடத்தை பிடித்த விளாடிமிர் புடின்…

world_forbes_001உலகளவில் பலம் வாய்ந்த 10 நபர்கள் தொடர்பாக ஃபொர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஃபொர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலக அளவில் சக்தி வாய்ந்த பத்து நபர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான நிலைப்பாட்டினால் புடினுக்கு ஆதரவு பெருகியுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் முதலிடம் பிடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அகதிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கெல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. ஆட்சியில் உள்ள ஒரு அமெரிக்க அதிபர் முதல் இரண்டு இடங்களுக்குள் வராமல் இருப்பது இதுவே முதலிடமாகும்.

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி 6 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பத்து இடங்களை பிடித்தவர்களின் பெயர் வருமாறு,

1.விளாடிமீர் புடின்- அதிபர், ரஷ்யா

2.ஏஞ்சலா மேர்கெல் சான்சலர், ஜேர்மனி

3.பாராக் ஒபாமா – அதிபர், அமெரிக்கா

4.போப் பிரான்சிஸ்- போப், ரோமன் கத்தோலிக்க திருச்சபை

5.ஷி ஜின்பிங் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

6.பில் கேட்ஸ் – பில் & மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் தலைவர்

7. ஜெனட் யெல்லென் – ஃப்டரல் வங்கியின் சேர்மென்

8.டேவிட் கமெரூன் -பிரித்தானிய பிரதமர்

9.நரேந்திர மோடி – இந்திய பிரதமர்

10.லாரி பேஜ்- கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர்.

-http://world.lankasri.com