பேச்சுவார்த்தைக்கு வருமாறு இராணுவ தலைவர்களுக்கு சூகி அழைப்பு

aung_san_suu_001மியான்மரில் தேசிய நல்லிணக்க பேச்சு வார்த்தைக்கு வருமாறு இராணுவ தலைவர்களுக்கு ஆங் சாங் சூகி அழைப்பு விடுத்துள்ளார்.

மியான்மரில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 1990-ல் நடைபெற்ற தேர்தலில் என்எல்டி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவை ராணுவம் ஏற்க மறுத்துவிட்டது.

எனினும், சர்வதேச நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக கடந்த 2010-ல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

இதில், ராணுவ ஆதரவு பெற்ற கட்சியான யுஎஸ்டிபி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், மியான்மரில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்ல் நடைபெற்றது, இதில் ஆங் சாங் சூகியின் என்எல்டி கட்சி 75 சதவீத இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கவுள்ளது.

ஆளும் கட்சியான ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக்கு கட்சி(யுஎஸ்டிபி) தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தேசிய நல்லிணக்க பேச்சுக்கு வருமாறு இராணுவ தலைவர்களுக்கு ஆங் சாங் சூகி அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசிய அதிபர் தரப்பு பேச்சாளர், தேர்தல் முடிவுகள் முழுமையான வெளியான பின்னரே பேச்சுவார்த்தை நடக்கும் என்றும், சூகியின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com