அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சான் பெர்னார்டினோ என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. சான் பெர்னார்டினோ நகரம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் போலீசார் மற்றும் வெடிபொருள் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் ஒன்றிலிருந்த மூன்று பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது தாக்குதல் நடத்தியவர்களின் பிடியில் யாருமில்லை.
-http://world.lankasri.com
சுட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் உலக மீடியாக்களை கையில் பிடிக்க இயலாது? சுட்டவர்கள் ஜோசப்பு அந்தோணி இருந்தா? மீடியாக்கள் நியாய படுத்துவார்கள் சுட்டவர் மன நிலை பாதிக்க பட்டவர் என்று.
MARAN நீங்கள் சொல்லுவது 100% சரி
இதையே இராமனும், குப்பனும் சேர்ந்து செய்திருந்தால் எப்படி சொல்லுவார்களோ?