தாலிபான் குழுக்களிடையே மோதல்: முல்லா மன்சூர் ‘படுகாயம்’

ஆப்கான் தாலிபான் தலைவர், முல்லா அக்தார் மன்சூர், பாகிஸ்தானில் தீவிரவாதிகளிடையேயான ஒரு சந்திப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தார் என்று ஆப்கானிய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

mullah_mansour
முல்லா மன்சூர்

பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் முல்லா மன்சூருக்கும் மற்றொரு தாலிபான் தளபதிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறுக்குப் பின்னர் துப்பாக்கி வேட்டுகள் சுடப்பட்டதாக தாலிபானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.

பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தாலிபான் தலைவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது

அவர் இறந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இந்த சண்டை நடந்தது என்பதையே தாலிபானுக்காகப் பேசிய ஒருவர் மறுத்தார்.

தாலிபானின் நிறுவனர் முல்லா ஒமார் இறந்ததாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தையதை அடுத்து அந்த அமைப்புக்குத் தலைவராக முல்லா மன்சூர் பதவியேற்றதிலிருந்தே, தாலிபான் அமைப்பில் கோஷ்டிப் பிரிவினைகள் நீடிக்கின்றன. -BBC