உங்கள் கருத்து : “நஸ்ரி கூறியது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது மடத்தனமான கூற்று என்பது மட்டும் உண்மை. அதற்காக அவரைக் கூண்டில் நிறுத்த முடியுமா?”
சட்ட அமைச்சர்: நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும் யுயுசிஏ-இல் மாற்றமில்லை
ஜோக்கர்: என்ன ஓர் அபத்தமான கருத்தைச் சொல்லியிருக்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர். நான் சட்டம் பயின்றவன் அல்ல. ஆனால், பொது அறிவு இருக்கிறது. அது, நம் நாடாளுமன்றத்தில் இருப்போரிடம் குறைந்த அள்விலேயே இருப்பதாகத் தெரிகிறது.
ஒரு வழக்கில் அளிப்படும் தீர்ப்பைப் பின்பற்றியே அதன்பின் வரும் வழக்குகளிலும் தீர்ப்பளிக்கப்படும். இது வழக்கமானதாகும்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சட்டம் (யுயுசிஏ) அரசமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்துள்ளது. இனி, அடுத்தடுத்து வரும் வழக்குகளிலும் நீதிமன்றங்கள் அந்தத் தீர்ப்பையே முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும்-அதனிலும் உயர்ந்த நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மாற்றும்வரை.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைச் சற்று கற்பனை செய்துப் பார்ப்போமே. அம்னோ அமைச்சர்கள் அந்தச் சட்டம் இன்னும் செல்லத்தக்கதே என்று நினைப்பதால் அதன்கீழ் மாணவர்கள்மீது குற்றம் சாட்டி நீதிமன்றம் கொண்டு செல்வார்கள். நீதிமன்றங்கள் யுயுசிஏ அரசமைப்பு முரணானது என்று கூறி அவர்களை விடுவிக்கும்.ஆக,அது பணத்தை விரயமாக்கும் செயலாக இருக்குமே அல்லாமல் அதனால் ஆகப் போவது எதுவுமில்லை.
நஸ்ரி, சிஎல்பி(வழக்குரைஞர் தொழில் செய்வதற்கான சான்றிதழ்) தேர்வுக்கு அமர்ந்தால் தேர்ச்சி பெறுவாரா?
பல்லினவாதி: சட்டம் அறியா சட்ட அமைச்சரா? முறையீட்டு நீதிமன்றம் யுயுசிஏ பிரிவு 15(5), அரசமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்து விட்டது. அதனிலும் மேலான நீதிமன்றம் அத்தீர்ப்பை மாற்றினால் ஒழிய அச்சட்டம் செல்லுபடி ஆகாது.
பால் வாரன்: எந்த மாதிரி சட்டம் பயின்றவர் பிரதமர்துறையில் உள்ள நஸ்ரி அப்துல் அசீஸ்?
அத்தீர்ப்பின்படி மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாம்.இனி அத்தீர்ப்பைக் கூட்டரசு நீதிமன்றத்தினால் மட்டுமே தள்ளுபடி செய்ய முடியும். நமது நீதித்துறை அம்னோவின் தாளத்துக்கு ஏற்ப நடனமாடும் என்பது தெரிந்த விசயம்தானே. அதனால், விரைவில் தீர்ப்பு திருத்தி எழுதப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால், அதுவரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பே நடைமுறையில் இருக்கும்.
நஸ்ரி கூறியது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது மடத்தனமான கூற்று என்பது மட்டும் உண்மை. அதற்காக அவரைக் கூண்டில் நிறுத்த முடியுமா?
ஹல்லோ: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குறிப்பிட்ட சட்டம் செல்லத்தக்கதே என்று அமைச்சர் கூறியுள்ளார்.
எப்படித்தான் சட்டம்பயின்று பட்டம் பெற்றாரோ. திமிர் பிடித்தவர்களோடு வாதாடி பயனில்லை.அம்னோ-பிஎன் கூட்டத்தாரிடம் இப்படிப்பட்ட திமிரான போக்கு சாதாரணமாகக் காணக்கூடியதே.
பெயரிலி: அமைச்சர் அவர்களே, எங்கே ஐயா சட்டம் பயின்றீர்கள்? நீதிபதி தம் தீர்ப்பில் கூறியது ஒரு ‘obiter dictum’ அல்ல. லத்தின்மொழியில் அதற்கு தீர்ப்புக்கு அப்பாற்பட்ட கருத்து என்பது பொருள்.
நீதிபதி, எந்த இடத்தில் அப்படிக் குறிப்பிட்டார் என்பதை தயைசெய்து விளக்க முடியுமா?
தைலெக்: நீதிமன்றத்தை அவமதித்தார் என்று அவர்மீது மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கு தொடுக்க வேண்டும். மூத்த வழக்குரைஞரும் எம்பியுமான கர்பால் சிங்கூட அதைச் செய்யலாம்.
ஃபெர்ட் டான்: அது என்ன ‘obiter dictum’-ஆ? அது ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பு.போகிற போக்கில் சொல்லப்பட்ட வெறும் கருத்தல்ல.
பெயரிலி: நஸ்ரி போன்ற அரசியல்வாதிகள் தாங்கள் சொல்வதே முடிவான தீர்ப்பு என்று நினைக்கிறார்கள். அதைத்தான் அவருடைய கூற்று நிரூபிக்கிறது.