அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த, ஐந்து வயது சிறுவனான ராம்ஸெஸ் சாங்குய்னோவின் அபரிமிதமான அறிவாற்றலும் வினோதமான தொலையுணர்வு திறமையும் அவரது தாயை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், அவரை ஆய்வுசெய்த மருத்துவர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ராம்ஸெஸ் பெரியவர்களே புரிந்துகொள்ள போராடும் புத்தகங்களை, மனதால் வாசித்து, சாதாரணமாக புரிந்துகொள்கிறான்.
ரகசியமாக ஒழுங்கற்ற வரிசையில் எழுதப்படும் எண்களை, தூரத்திலிருந்து மிக சரியாக அவனால் சொல்ல முடிகிறது. என ராம்ஸெஸ் தாயார் நிக்ஸி சாங்குய்னோ (32) கூறுகிறார்.
மேலும், 12 மாத குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு படிக்கும் திறமை வந்துவிட்டது. 5 வயதிலே கிரேக்கம், ஹிப்ரு, ஜப்பனிஸ், அரபு உட்பட 7 மொழிகளை அவனால் ஓரளவுக்கு பேசவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது.
சிரமமான அல்ஜிப்ரா கணக்கு சமன்பாடுகளை அவனால் போடமுடிகிறது. வேதியியல் தனிம வரிசை அட்டவணையை அவனால் முழுமையாக வரைய முடிகிறது.
உலகில் உள்ள 5 வயது சிறுவர்களில் ராம்ஸெஸ் அறிவில் முதலாம் இடத்தில் இருப்பான் என நம்புவதாக அவரது இளம் வயது தாயார் கூறுகிறார்.
அதோடு மட்டுமல்லாமல், ராம்ஸெஸின் நுண்ணுணர்வு திறனையும் மேதைக்கான அறிகுறிகளையும் நிரூபிக்கும் வீடியோ காட்சிகளையும் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியிட்டிருக்கிறார்.
தற்போது, ராம்ஸெஸ் அறிவியலாளர்களுடைய முக்கிய ஆய்வுப் பொருளாகவே கருதப்படுகிறார்.
இந்த ஆன்லைன் வீடியோவை பார்த்த, ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் ஆசிரியரான டாக்டர் டயான் பவல், இந்த தொலையுணர்வு அறிவு ஒரு மன இறுக்கத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்களோடு தகவல் தொடர்புக்கான ஒரு மாற்றுமுறையாக ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.
நரம்பியல் மருத்துவர்களும் ராம்ஸெஸுக்கு உள்ள வினோதமான திறமை நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என்றும் கூறுகின்றனர்.
ஆய்வின்போது, ராம்ஸெஸிடம் இன்னும் அறியப்படாமல் இருக்கும் வேறு திறமைகளும் வெளிப்படலாம். இதுபோல, தொலையுணர்வு உள்ள குழந்தைகள் குறைந்தது ஏழு பேரை இதுவரை அறிந்திருக்கிறேன் அவர்களிடம் மன இறுக்கத்தின் விளைவாகவே இந்த நுண்ணுணர்வு இருந்திருக்கிறது.
ஆனால், ராம்ஸெஸுக்கு அதுபோல காரணம் இருக்குமா? அல்லது வேறு விஷேச குணமா? என்பது கடுமையான கட்டுப்பாட்டு நிலைக்கு உட்படுத்திய ஆய்வின் மூலமே அறிய முடியும். என பவல் கூறுகிறார்.
ஆச்சரியங்களும் வினோதங்களும் அவ்வப்போது உலகில் ஏற்படுவதும் ஒரு இயல்பாகிவிட்டது. மனிதனால் இன்னும் அறியப்படாதது பிரபஞ்சத்திலும் பல கிலோ மீற்றர்களுக்கும் மேலான பசுபிக்கடல் ஆழத்திலும் மட்டுமல்ல, மனிதனுக்குள்ளேயே இருக்கிறது.
அவ்வப்போது சில மனிதர்கள் வினோத சக்தியோடு தோன்றினாலும் அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமான சக்தியுடையவர்களாக உள்ளனர்.
மனிதர்களின் அந்த விஷேச சக்திகளுக்கு மூளையை தவிர வேறு எது காரணமாக முடியும். மனித மூளையில் பெரும்பகுதியான செல்கள் (80%) இயங்காத நிலையிலே இருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி இயங்காத செல்களில் மனிதனுக்கு விதவிதமான அபூர்வ சக்தியளிக்கும் தன்மையுள்ளவை அடங்கியுள்ளன. அவைகளை முற்றிலும் இயங்க வைப்பது நம் சக்திக்கு அப்பாற்பட்டது என்றாலும், சமயங்களில் சரசரி மனிதர்களுக்கு இயங்காத அந்த செல்களில் ஒரு சில ஏதோ காரணங்களால் செயல்பட துவங்குவது இதுபோன்ற வினோத சக்திகளுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
-http://world.lankasri.com