செல்போன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

isis_mobile_001செல்போன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து இரண்டு பிணைக்கைதிகளை கொலை செய்யும் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை தலையை வெட்டிக்கொலை செய்தல், மாடியில் இருந்து தள்ளிவிடுதல்,கல்லால் அடித்து கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் மொபைல் போன் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்து பிணையக்கைதிகளை கொலை செய்யும் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

டமாஸ்கஸ் பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், 2 பிணையக்கைதிகள் வெடிகுண்டுவின் மீது முட்டி போட வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் தனது கையில் இருக்கும் மொபைல் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்கிறார்.

முன்னதாக இந்த காட்சிகளை பார்க்கும்படி 3வது பிணையக்கைதிக்கு  தீவிரவாதிகள் கட்டளையி்டுகின்றனர்.

இறுதியில் பிணைக்கைதிகளின் உடல் சிதறி விழுவது போன்று வீடியோ முடிவு பெறுகின்றது.

-http://world.lankasri.com