பாரீஸ் உடன்பாடு ஒரு திருப்புமுனை.. ஒபாமா மகிழ்ச்சி + பாராட்டு

obama_usaவாஷிங்டன்: புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த பாரீஸில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாட்டை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாக பாராட்டியுள்ளார்.

புவி பெப்பமயமாதலை தடுப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு கீழே குறைக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த உடன்பாட்டை இந்தியா, சீனா உள்பட 196 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் உடன்பாடு குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறுகையில், பாரீஸ் மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாடு வரலாற்று சிறப்புமிக்கது.

இது உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த உடன்பாடு உள்பட எந்த ஒரு உடன்பாடும் சிறந்தது அல்ல. சுமார் 200 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சவாலான விஷயம்.

இருப்பினும் இந்த உடன்பாடு மூலம் நம் பூமியை காப்பாற்ற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகம் ஒன்றானால் என்ன செய்யலாம் என்பதை நாம் இந்த உடன்பாடு மூலம் காண்பித்துள்ளோம். உடன்பாட்டிற்கு செயல் வடிவம் அளிப்பது எளிது அல்ல.

ஆனால் முன்னேற்றம் உடனடியாக வந்துவிடாது. நம் சாதனைகளை பார்க்க நாம் இருக்க மாட்டோம். இருப்பினும் பரவாயில்லை என்றார். புவி வெப்பமயமதாலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமா உலக தலைவர்களுடன் கோபன்ஹேகன், டென்மார்க்கில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் பாரீஸ் மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது மூலம் ஒபாமாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

tamil.oneindia.com