செவ்வாயில் தண்ணீர்… 2015ல் வரலாற்றில் பொன்னால் பொறிக்கும் தகவலை வெளியிட்ட நாசா!

mars-water57நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பதை இந்தாண்டு செப்டம்பர் மாதம் நாசா அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. நாசாவின் இந்த அறிவிப்பின் மூலம் செவ்வாயில் மனிதர்களைக் குடியேற்றும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா சார்பில் ‘மங்கள்யான்’ அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை குறித்து ஆராய கடந்த 2006ம் ஆண்டு ‘மார்ஸ் ரெகோனாய்சன்ஸ் ஆர்பிட்டர்’ (எம்.ஆர்.ஓ.,) என்ற விண்கலத்தை ஏவியது. இதில் பொருத்தப்பட்ட ‘இமேஜிங் ஸ்பெக்டோ மீட்டர்’ எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தில், அங்கு நீர் ஓடுவதற்கான ஆதாரம் கிடைத்தது.

யூகம் உறுதியானது… நாசாவின் இந்த அறிவிப்பு மூலம் விஞ்ஞானிகளின் நீண்டகால யூகம் உறுதி செய்யப்பட்டது. செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் இது முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

tamil.oneindia.com