சிரியா போருக்கு தேவைப்பட்டால் மேலும் ராணுவத்தை அனுப்புவோம்: புடின் தகவல்

putin_is_oo1ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் தேவைப்பட்டால் மேலும் ராணுவத்தை அனுப்புவோம் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் எதிர் தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளது

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலர் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். எனவே சிரியாவில் வரும் 6 மாதங்களுக்குள் ஒருங்கிணைந்த அரசாங்கம் மற்றும் முறையான பேச்சுவார்த்தை தொடங்குவது தொடர்பாக ஐ.நா. சபையின் பாதுகாப்பு குழு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்காக தேவைப்பட்டால் மேலும் ராணுவத்தை குவிப்போம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் எங்களிடம் உள்ள முழு ராணுவத்தையும் ஈடுபடுத்தவில்லை.

எனினும் தேவைப்பட்டால் மேலும் ராணுவத்தை ஈடுபடுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com