கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய முஸ்லீம்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரியாவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப்( Al Shabaab) அமைப்பு சோமாலியா , கென்யா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து கொலை செய்து வருகிறது.
இந்நிலையில் கென்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மண்டேரா அருகில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் பேருந்தை மறித்துள்ளனர்.
உடனடியாக பேருந்தில் இருந்த முஸ்லீம்கள் தங்களின் உடைகளை கிறிஸ்தவர்களிடம் கொடுத்து அணிந்துகொள்ள கூறினர்.
இந்நிலையில் பேருந்தினுள் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை தனிதனியாக பிரிந்து நிற்குமாறு கூறியுள்ளனர்.
எனினும் அதற்கு மறுத்த முஸ்லீம்கள் சுடுவதாக இருந்தால் எங்கள் அனைவரையும் ஒன்றாக சுடுங்கள் அல்லது விடுதலை செய்வதாக இருந்தாலும் எங்கள் அனைவரையும் ஒன்றாக விடுதலை செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும் கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்துள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த தீவிரவாதிகள் மீண்டும் வருவதாக எச்சரித்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றனர்.
எனினும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்து ஆண்டு பேருந்தை மறித்த தீவிரவாதிகள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்த 36 கிறிஸ்தவர்களை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com
மனிதம் மக்களிடம் உள்ளது. அழிவு அரசியல்வாதிகளிடம் உள்ளது.