ஏழை , பணக்காரர்களை பிரிக்கும் சுவர்: பெரு நாட்டில் உள்ள ”அவமானத்தின் சுவர்”

latin_america_001ஏழை மற்றும் பணக்காரர்களை பிரிக்கும் விதமாக பெரு நாட்டில் கட்டப்பட்டுள்ள சுவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இதன் தலைநகர் லைமாவில் உள்ள சான் ஜுவான் டி மிராஃபொலோரீஸ் (san juan de miraflores) மற்றும் சுர்க்கோ(surko) பகுதிகளை பிரிக்கும் விதமாக 10 அடி உயர சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

பெருவின் பெர்லின் சுவர் என்று அழைக்கப்படும் இந்த சுவர் பணக்காரர்களையும் ஏழைகளையும் பிரிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது நாட்டின் பணக்கார பகுதிகளில் ஒன்றான லாஸ் காஸ்வரீன மற்றும் ஏழைகள் நிறைந்த விஸ்டா ஹெர்மோசாவையும் பிரிக்கும் விதமாக இந்த சுவர் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பணக்காரர்கள் வசிக்கும் பகுதியான லாஸ் காஸ்வரீனவில் உள்ள வீடுகளில் விஸ்டா ஹெர்மோசா பகுதியை சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடக்கூடும் என்ற பயத்தின் காரணமாக இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த செயல் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பலரும் இந்த சுவர் எழுப்பப்பட்டதற்காக தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாபெரும் பேரணியை நடத்தவுள்ளது சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஊதிய ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில் லத்தின் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com