கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்த சோமாலியா

Crisகிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சோமாலியா அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு மத விவகாரத்துறை பொது இயக்குனரான ஷேக் முகமது கய்ரோ நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இஸ்லாமிய சமூகத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பதாகவும், தடையை மீறி நடத்தப்படும் கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு துறைக்கு அறிவுருத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த புருனே அரசு, அரசின் உத்தரவை மீறி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.14 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

-http://world.lankasri.com