போரினால் காயமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டமாஸ்கஸ் பகுதியை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது டமாஸ்கஸின் பெரும்பகுதி அரச ராணுவத்தினர் வசம் உள்ளது.
இந்நிலையில் போரினால் காயமடைந்த தீவிரவாதிகள் அவர்களின் குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் சிரிய அரசாங்கத்திடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி போரினால் காயமடைந்த தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் டமாஸ்கஸை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் ஐ.எஸ். அமைப்பு பலமாக உள்ள வடக்கு சிரியாவில் உள்ள பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என பிரித்தானியாவை சேர்ந்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
மேலும், காயமடைந்தவர்களை வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்கான பேருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , சிரியா முழுவதும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
-http://world.lankasri.com