எரிவாயு லொறி வெடித்து சிதறியதில் 100 பேர் பலி: கிறிஸ்துமஸ் தினத்தில் நிகழ்ந்த சோகம்

nigera_christams_001நைஜீரியா நாட்டில் எரிவாயு ஆலை ஒன்றில் லொறி வெடித்து சிதறிய விபத்தில் 100க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள Anambra என்ற மாகாணத்தில் தான் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

மாகாணத்தில் உள்ள Nnewi என்ற நகரில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை வேளையில் எரிவாயுவை நிரப்பும் பணியில் ஆலை ஊழியர்களும் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், சமையல் எரிவாயு நிரப்பப்பட்டுள்ள லொறியில் அதிக வெப்பம் இருந்த்தாகவும், அது சமநிலை அடையும் வரை காத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

இந்த தாமத்தினால் லொறி திடீரென வெடித்து சிதறியுள்ளது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் அருகில் இருந்த அனைவரும் துடித்துடித்து உயிரிழந்துள்ளனர்.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிருக்கலாம் என்றும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

எனினும், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

-http://world.lankasri.com