ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களை இலக்கு வைக்கும் பயங்கரவாதிகள்

european_attack_001புது வருடத்திற்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் தலைநகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியம் உள்ளதாக ஆஸ்திரியா பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரிஸில்  ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆஸ்திரியா நட்பு ரீதியில் வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில்,

“ புது வருடத்திற்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் தலைநகரங்களில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு அல்லது வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம்.” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாட்களில் எச்சரிக்கை செய்தியானது ஐரோப்பிய யூனியன் பொலிஸாருக்கு சென்றுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யவும் ஆஸ்திரிய பொலிஸ் கேட்டுக் கொண்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

 

-http://world.lankasri.com