பிரித்தானியா செல்வதற்காக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள்: பிரான்ஸ் எல்லையில் பதற்றம்

calais_cristmas_001பிரித்தானியா செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் பிரான்ஸின் எல்லையான கலேஸ்வில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸின் எல்லையில் உள்ள கலேஸ்(Calais) பிரித்தானியா செல்வதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது.

சிரியா , ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகள்  கலேஸ் பகுதியின்  எல்லை அருகே தற்காலிய குடியிருப்பு அமைத்து வசித்துவருகின்றனர்.

இங்குள்ள யூரோ சுரங்கப்பாதை வழியாக ஏராளமான அகதிகள் பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதால் அங்கு அவ்வப்போது பரபரப்பு ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான கடந்த வெள்ளியன்று நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் இப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக வாகனத்தில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

எனவே அகதிகள் அங்கிருந்து கலைந்து செல்லும் வரை ஏ16 தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பிரித்தானியா செல்வதற்காக கலேஸ் பகுதியில் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com