ஆப்கான் படையினரால் பணயக்கைதியாக பிடித்து வரப்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிலரின் தலையை துண்டித்து பழிக்குப் பழி வாங்கியுள்ளனர்.
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் ஆப்கான் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வந்தது.
சண்டையின் இடையே சில ஆப்கான் படையினரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர், பதிலுக்கு ஆப்கான் படையினரும் சில தீவிரவாதிகளை பணையக்கைதியாக பிடித்து வந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் Nangarhar பகுதியில் 4 ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலையை துண்டித்து ஆப்கான் படையினர் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
இதை அறிந்த ஐ,எஸ்.தீவிரவாதிகளும் பிடித்துச் சென்ற ஆப்கான் படையினரில் 4 பேரின் தலையை துண்டித்து பழி தீர்த்துள்ளனர் என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த அச்சின் மாவட்டத்தின் ஆளுநரான காலிப் முஜாகிப், ஐ.எஸ்.தீவிரவாதிகள் மட்டுமல்ல ஆப்கான் படையினரும் செய்த்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
ஆப்கானில் செல்வாக்கு மிகுந்தவர்கள் தனியாக படைகள் வைத்திருப்பது குறித்து ஆப்கான் அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் பல கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




-http://world.lankasri.com


























நீ அவன் தலையை வெட்டும்போது “அவன்” நாமத்தைதான் சொல்ற. அவன் உன் தலையை வெட்டும் போதும் “அவன்” நாமத்தைத்தான் சொல்றான்.ரெண்டு பேரும் ஒரு பேரைச் சொல்லி அவன் அவன் தலைய வெட்றீங்க. பாவம் அந்த :அவன்” யாருக்குத்தான் சப்போர்ட் பண்ணுவான். வாழ்க “அவன்” நாமம்.
மிகவும் அநாகரீகமான செயல். கடவுளின் பெயரால் என்னன்னவோ அநியாங்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. இவர்களை யார் திருத்துவது?