ஐஎஸ் இயக்கத்தில் வந்து இணையுமாறு மக்களுக்கு அந்த இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ் அமைப்பு பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி பேசியதாக ஓடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், அமெரிக்கா மற்றும் ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலில் ஐஎஸ் மீதான நெருக்கடி அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உலகமெங்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலை இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என கூறியுள்ள பாக்தாதி, மக்களை ஐஎஸ் இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க படைகள் தாக்குதலின் மீது பாக்தாதி கொல்லப்பட்டு விட்டதாகவும், காயமடைந்து விட்டதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில் ஓடியோ வெளியாகியுள்ளது.
-http://world.lankasri.com

























