ஜேர்மனியில் 7 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் ஊடுருவல்? ரயில் நிலையங்களை மூடிய பொலிசார்

germanpolice_hunt_001ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்துள்ள 7 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதால் ரயில் நிலையங்களை மூடிய பொலிசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜேர்மனியில் உள்ள மியூனிக் நகரில் புத்தாண்டு நள்ளிரவு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக ரகசிய தகவல்கள் வெளியானது.

மேலும், ஈராக் நாட்டை சேர்ந்த 7 மனித வெடிகுண்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் ரயில் நிலையங்களில் தங்களை வெடிக்க செய்து தாக்குதல் நடத்த உள்ளதாகவும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை சுமார் 500க்கும் மேற்பட்ட பொலிசாரை அதிநவீன துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது.

குறிப்பாக Hauptbahnhof மற்றும் Pasing ஆகிய இரண்டு ரயில் நிலையங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றிய பொலிசார் அதற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

இது குறித்து காவல்துறை தலைவரான Hubertus Andra பேசுகையில், ‘ரகசிய தகவல்களை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்த தீவிரவாதிகள் எங்கு பதுங்கியுள்ளனர்? எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கபெறவில்லை என்றார்.

இரவு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் எந்த நபரையும் பொலிசார் கைது செய்யவில்லை. இன்று அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டாலும், அப்பகுதிகளில் பொலிசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

-http://world.lankasri.com