கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் பிரதமர் ட்ரூடேவின் முடிவு உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
கனடா பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, கஞ்சா போதை பொருளை சட்ட பூர்வமாக்க மூடிவு செய்துள்ளார்.
அவரது இந்த முடிவு உள்நாட்டில் பல்வேறு சிக்கல்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரது இந்த முடிவு சர்வதேச அளவிலும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்பு மற்றும் சட்ட வல்லுனரான எர்ரோல் மெண்டீஸ் தெரிவித்துள்ளார்.
கனடா தற்போது மூன்று சர்வதேச அமைப்புகளில் அங்கத்தவராக உள்ளது.
இந்த அமைப்புகளின் சட்டதிட்டங்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக நிலையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் கனடாவின் முடிவினால் பல பாதிப்புகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
லத்தின் அமெரிக்க நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் அமெரிக்காவில் இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது.
மேலும், தற்போதைய ஆளும் கட்சியான அமெரிக்க குடியரசு கட்சியும் இதற்கு எதிராக உள்ளது.
இந்நிலையில் நடைப்பெறவுள்ள தேர்தலிலும் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமாயின் இதற்கான எதிர்ப்பு வலு பெறும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-http://world.lankasri.com