ஜிலிதென்: லிபியாவில் போலீஸ் பயிற்சி மையத்தில் இன்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
லிபியாவின் முர்குப் பகுதி ஜிலிதென் பிராந்தியத்தில் போலீஸ் பயிற்சி மையம் மீது வெடிகுண்டுகள் நிரம்பிய டிரக் ஒன்று மோதியது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே 65 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தோர் மிஸ்தாரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.