பசி பட்டினியால் மரணமடையும் மக்கள்: வயிற்றுப்பசிக்காக இலைகளை அவித்து சாப்பிடும் பரிதாபம்

syria_dead_001சிரியாவில் நிலவிவரும் உள்நாட்டுப்போர் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.

ஒருபுறம் ஐஎஸ் தீவிரவாகதிகள் போரிட்டு வருகிறார்கள், மறுபுறம் சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர்.

இந்த குண்டுவீச்சு தாக்குதலால், பாதிக்கப்படும் மக்கள் உடமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

சில பகுதி மக்கள் தப்பித்து செல்லவும் முடியாமல், வாழவும் முடியாமல் இருதலை கொல்லிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அதில் ஒரு கிராமம்தான் பட்டினியால் செத்து மடியும் Madaya. சிரியாவின் தலைநகரான Damascus நகரத்தில் உள்ள Madaya என்ற கிராமத்தில் வசிக்கும் 40,000 மக்கள் பசிபட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டும், 30 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். இந்த கிராமத்தில் நிலவி வரும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து, அங்கு செயல்படும் மருத்துவ கவுன்சிலின் மேலாளர். Dr Mohamad Youssef கூறியதாவது, இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் 2 அல்லது 3 பேர் அன்றாடம் பசியால் இறந்துபோகின்றனர்.

அதுமட்டுமின்றி, அன்றாடம் 50 பேர் மயக்கமடைவதோடு மட்டுமல்லால் தீவிரமாக நோய்வாய்ப்படுகின்றனர். அதிகமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியர்வர்களே பட்டினியால் இறக்கின்றன.

இந்த மக்கள் உணவாக, தண்ணீரில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து குடிப்பது, மரங்களில் உள்ள இலைகளை வேகவைத்து சாப்பிடுகின்றனர்.

இவ்வகை உணகளால், வயிற்றுப்போக்கு, தோல் வியாதிகள், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர்.

மயக்கமுற்ற நிலையிலும், கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும் 24 மணிநேரமும் மக்கள் அனுமதிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதனால் இரவு, பகலாக மருத்துவ ஊழியர்கள் பணியில் இருந்து மனிதப்பேரழிவுகளை தடுத்துவந்தாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் நாங்களும் உதவிசெய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

மேலும், சிலர் உயிர்வாழ்வதற்காக நாய்களையும், பூனைகளையும் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

கடந்த வாரம், கர்ப்பிணி பெண் உட்பட 30 பேர் இந்த கிராமத்தில் இருந்து குடிபெயர்ந்து சென்றுள்ளனர், இதில் 5 பேர் இராணுவத்தினரால் சொலை செய்யப்பட்டுள்ளனர், மீதியுள்ளவர்கள் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு ஐ.நா தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், இங்கு சிக்கி தவிக்கும் 40,000 மக்களை காப்பாற்றுமாறு சிரியா உள்நாட்டு பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

-http://world.lankasri.com