கடத்தப்பட்ட 600 யசிதி சிறுவர்கள்: தற்கொலைப்படையினராக பயன்படுத்தும் ஐ.எஸ்

abducted_400_yazidi_001ஈராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட யசிதி சிறுவர்களை தற்கொலைப்படையினராக மாற்றி வருவதாக குர்து அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் சிஞ்சர் பகுதியில் இருந்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் 600 சிறுவர்களை கடத்தி சென்றுள்ளதாக குர்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 200 சிறுவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்துள்ளதாகவும் எஞ்சியவர்களை அவர்கள் பயிற்சியளித்து வருவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.படையினர் எப்போதும் தங்களில் திறமையான போராளிகளையே முன் வரிசையில் நிறுத்தி போராடி வந்துள்ளனர்.

அவர்களுக்கு உதவியாக தற்போது யசிதி சிறுவர்களை தற்கொலை படையினராக பயன் படுத்த அவர்கள் முயல்வார்கள் என குர்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ். பயிற்சி களத்தில் இருந்து தப்பி வந்த 12 வயது யசிதி சிறுவனும் இதையே உறுதி செய்யும் வகையில் தகவல்களை தெரிவித்துள்ளான்.

கூட்டுப்படையினரின் வான் தாக்குதலின் போது 60 பேர் கொண்ட சிறுவர் குழுவை சுரங்கப்பாதை ஒன்றில் பத்திரமாக மறைத்து வைத்திருந்ததாகவும்,

அமெரிக்கர்கள் மத நம்பிக்கையற்றவர்கள் என்றும், அவர்கள் தங்களை கொல்ல முயன்று வருவதாகவும், ஆனால் ஐ.எஸ். பெற்றோரை விடவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் அந்த சிறுவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிரியாவில் இருந்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறுவர்களை வைத்து கடந்த 4 மாதங்களில் மட்டும் 29 தற்கொலைப்படை தாக்குதலை ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடித்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்,

ஆனால் அதில் எத்தனை யசிதி சிறுவர்கள் என அறுதியிட்டு கூற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com