ஐஎஸ் தீவிரவாதிகளின் கருவூலத்தை அழித்த அமெரிக்க விமானங்கள்: வீடியோ வெளியானது

is_money_001ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள முகாம் ஒன்றில் பணத்தை சேமித்து வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் பாதுகாத்து வந்தனர்.

உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கைக்கூலிகள் மற்றும் ஐ.எஸ் படையில் சேரும் வெளிநாட்டினர்களுக்கு இங்கிருந்துதான் பணபட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த இடத்தை கடந்த 11ம் திகதி அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழித்துவிட்டன, மில்லியன் கணக்கான பணம் தீக்கிரையாகிவிட்டது, ஆனால் அழிக்கப்பட்டது எந்த நாட்டு பணம்? எவ்வளவு தொகை? என்ற தகவல் வெளியாகவில்லை.

இதுகுறித்து அமெரிக்காவின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி ஜெனரல் Lloyd Austin கூறுகையில், இது ஒரு சிறந்த தாக்குதல், மில்லியன் கணக்கான பணம் அழிந்து விட்டது.

இதனை தொடர்ந்து அடுத்தபடியாக ஐஎஸ்-க்கு வருவாய் அளிக்கும் நிலைகளை தாக்கி அழிக்க உள்ளதாகவும், பொருளாதார ரீதியாக பாதிப்படையும்படி அவர்கள் மீது விமான தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com