போதை மருந்தில் வருவாய் ஈட்டும் ஐ.எஸ்: முக்கிய பங்கு வகிக்கும் பிரித்தானியா குழுக்கள்

mafia_funds_isis_001அல்பேனியாவில் இருந்து வரும் போதை மருத்தை பிரித்தானியாவில் விற்று ஐ.எஸ்.தீவிரவாத குழுவினர் வருவாய் ஈட்டுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அல்பேனியா கிராமப்புற மலைப்பிரதேசங்களில் செயல்பட்டு வந்த போதை மருந்து கும்பல்களை மிரட்டி ஐ.எஸ் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இதில் இருந்து ஆண்டிற்கு 4 பில்லியன் பவுண்டு மதிப்பிலான போதை மருந்துகளை பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்று வருவாய் ஈட்டி வருகின்றனர்.

போதை மருந்து கும்பல்களே அதிக ஜிகாதிகளை ஐ.எஸ் போன்ற அமைப்புகளுக்கு வழங்கி வருவதாக முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.

போதை மருந்து கும்பல்களே வன்முறை மற்றும் சட்டத்துக்கு புறம்பான வகையில் பணத்தை உருவாக்கி ஜிகாதி அமைப்புகளுக்கு தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அல்பேனியா அரசின் பாதுகாப்புப்படையினருக்கும் ஆயுதக்கடத்தல் கும்பல் மற்றும் ஜிகாதிகளுக்கும் இடையேதான் அதிக மோதல்கள் ஏற்படுகின்றன.

ஊழல் மலிந்த அரசு அதிகாரிகள் சிலரின் தொடர்பில்தான் போதை மருத்து கடத்தல் அல்பேனியாவில் நடைபெற்று வருவதாக உள்ளூர் பொதுமக்கள தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில், ஆண்டுக்கு 900 டன் போதை மருந்துகள் Lazarat பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதாக கூறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் ஜிகாதி குழுக்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி குறித்து விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

-http://world.lankasri.com