சிரியாவில் அரசு படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 135 பேர் வரை பலியாகியுள்ளதாகவும், பெண்கள், சிறுமிகள் உட்பட 400 பேரை கடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு:
இதற்கிடையில், பெண்கள், சிறுமிகள் உள்பட 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அவர்ளை பிணைகைதிகளாக பிடித்து வைத்து கொண்டு சிலரை மனித கேடயமாகவும், இளம்பெண்களை பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு:
ஏற்கனவே சிரியாவின் பெரும்பகுதியை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று அலேப்போ மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது.
டெயிர் எஸ்ஸார் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர், நகரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.எஸ் தீவிரவாதிகள் கனரக ஆயுதங்களுடன் வந்து குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 85 பேரும், சிரியா ராணுவப்படை மற்றும் ஜனாதிபதியின் ஆதரவாளர் படைகளை சேர்ந்த 50 பேரும் என 135 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்ததாகவும் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.
ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://world.lankasri.com