அரசாங்கம் பாதுகாப்பை முடுக்கிவிடும்படி உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“உலகின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதை அடுத்து மலேசியாவில் பயங்கரவாத அச்சுருத்தல் எழுமானால் அதைச் சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி அரசாங்கம் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளது”, என நஜிப் தம் வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.
அதே வேளையில் மக்கள் ஊகங்கள் செய்வதையும் விட்டு விட விட வேண்டும். அது தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.
மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விடுபவனும் , பயங்கரவாதியே .
உலகில் பெரும்பாலான தலைகள் இவனைப்போல் தான் இருக்கின்றனர்– சொல்வது ஒன்று செய்வது ஒன்று- மனித உரிமைகளுக்கு பேச்சு மட்டும்தான்– சொந்த மக்களின் பணத்தை சுருட்டுவதே வேலை— ஆனால் பெரிய உண்மை விளம்பி போல் காட்சி தருவது–