டிபிபிஏ தொடர்பில் புத்ரா ஜெயா மலாய் ஆட்சியாளர்களின் ஆலோசனையை நாட வேண்டும்- மலாய் வர்த்தக சங்கம்

chamஅரசாங்கம்  பசிபிக்  மண்டல  வர்த்தகப்  பங்காளித்துவ  ஒப்பந்தத்தை  ஏற்பதற்குமுன்  ஆட்சியாளர்  மன்றத்தின்  ஆலோசனையை  நாடுவது  நல்லது  என்கிறது  மலாய் வர்த்தக,  தொழிலியல்  சங்கங்களின்  சம்மேளனம்(டிபிஎம்எம்).

டிபிபிஏ  நாட்டின்  இறையாண்மையைப்  பாதிக்கக்கூடியது  என்பதால்  அவ்வாறு  செய்வது  அவசியம்  என   டிபிஎம்எம்  தலைவர்  சைட்  அலி  அலாட்டாஸ்  கூறினார்.

அதை  நாடாளுமன்றமே கவனித்துக்  கொள்ளும்  என்று  கூறப்படுவதில்  அவருக்கு  நம்பிக்கை  இல்லை.