பிரான்சில் பொருளாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஹாலண்டே அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று தொழிலதிபர்களுடனான ஆண்டு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் பிரான்ஸில் பொருளாதார அவசர நிலையை அறிவித்தார்.
மேலும் வேலையில்லா திண்டாட்டத்ததை தவிர்ப்பதற்காக 1.5 பில்லியன் பவுண்ட் பணம் செலவலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதற்கான பணம் வரி மூலம் வசூலிக்கப்படாது என்றும் சேமிப்பில் இருந்து கிடைக்கும் பணம் மூலம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமாக வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்க தொகை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.
மேலும் இந்த புதிய பொருளாதார சீர்திருத்தங்களை பொருளாதார அவசர நிலை பிரகடனமாக கருதுவதாகவும் அதிபர் ஹாலண்டே தெரிவித்தார்.
-http://world.lankasri.com