செகாமாட் மருத்துவமனையின் சிசு தீவிரக் கவனிப்புப் பிரிவில் ஜனவரி 9-இலிருந்து சரியாக வேலை செய்யாதிருந்த குளிரூட்டி சரிசெய்யப்பட்டது.
இப்போது அம்மருத்துவமனையில் குளிர்சாதன வசதி நன்கு செயல்படுவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார்.
“அரசாங்க மருத்துவமனைகளில் தொழில்நுட்ப அல்லது பராமரிப்புப் பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றைச் சரிசெய்து நோயாளிகளுக்குப் பாதுகாப்பான, வசதியான, சிறந்த சுகாதாரக் கவனிப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த அமைச்சும் மருத்துவமனை நிர்வாகங்களும் எப்போதுமே விரைந்து செயல்பட்டு வருகின்றன”, என்று சுப்ரமணியம் ஓர் அறிக்கையில் கூறினார்.