வேலை செய்த வீட்டில் நகைகளும் ரொக்கமுமாக ரிம1,220,000 களவாடிய பணிப்பெண்னுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.
பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான மேரி ஜேன் இம்போர்டண்ட் எஸ்கலானா,48, 2014க்கும் 2015 அக்டோபருக்குமிடையில் அந்தத் திருட்டை நடத்தியதாக த ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
எஸ்கலானா திருடிய நகைகளை அடகு வைத்துப் பணமாக்கினார். அந்தப் பணத்தையும் திருடிய ரொக்கத்தையும் அப்படியே சூதாட்ட விடுதியில் சூதாடித் தோற்றார்.