ஹாஷிம் அப்துல்லா இசி-இன் அடுத்த தலைவர்

ec1தேர்தல்  ஆணைய(இசி)த்தின்   புதிய  தலைவராக  ஹாஷிம்  அப்துல்லா  பெயர்  குறிப்பிடப்பட்டிருக்கிறார். இப்போதைய  தலைவர்  அப்துல்  அசீஸ்  முகம்மட்  யூசுப்  இம்மாதம்  பணி  ஓய்வு  பெறுகிறார்.

ஜனவரி  24-இல்  ஹாஷிம்  தலைவர்  பதவியை  ஏற்பார்  என  பெர்னாமா  கூறிற்று.

ஹாஷிம்  இப்போது  அவ்வாணையத்தின்  துணைத்  தலைவராக  இருக்கிறார்.  2014  செப்டம்பரிலிருந்து  அவர்  அப்பதவியை  வகித்து  வருகிறார்.