நடுக்கடலில் படகுகள் விபத்து:20 குழந்தைகள் உள்பட 42 பேர் கடலில் மூழ்கி பலி

greak_refugee_001ஐரோப்பிய நாடுகளில் புகலிடத்திற்காக சட்டவிரோதமாக பயணம் செய்த புலம்பெயர்ந்தவர்களின் படகுகள் விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உள்பட 42 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரேக்க நாடு வழியாக பிற ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் எதிர்பார்த்து சுமார் 100 பேர் அடங்கிய இரண்டு படகுகள் நேற்று நள்ளிரவு ஏஜியன் கடலில் பயணம் செய்துள்ளன.

நள்ளிரவில் புறப்பட்ட இந்த படகுகளில் ஒன்று கிரேக்க தீவுகளில் ஒன்றான Kalolimnos என்ற பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது.

இந்த விபத்தில் 20குழந்தைகள் உள்பட 34 பேர் பலியாகினர். இதே போல், Farmakonisi என்ற தீவுப்பகுதியில் மற்றொரு படகு விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாயினர்.

தகவல் கிடைத்து வந்த கிரேக்க கடலோர காவல்படையினர், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 26 பேரை மீட்டனர்.

இதே பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்திருந்த 16 பெண்கள்,20குழந்தைகள் மற்றும் 7 ஆண்கள் என 34 சடலங்களை மீட்டுள்ளனர்.

எனினும், இவ்விரு படகுகளிலும் எத்தனை நபர்கள் பயணம் மேற்கொண்டனர் என்ற உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில், படகுகளில் 100 பேருக்கு மேல் பயணம் செய்திருக்கலாம் என மீட்கப்பட்டவர்களிடமிருந்து தெரியவந்துள்ளது.

எஞ்சிய நபர்களை கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

-http://world.lankasri.com