டிபிபிஏ-யை விரும்பும் அம்னோ சீனர்கள் கட்சியாகத்தான் இருக்க வேண்டும்: ஹாடிக்கு புவா பதிலடி

tonyபாஸ் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  ஒட்டி  உறவாடும்  அம்னோவில்  சீனர்கள்  நிறைந்திருக்கிறார்களோ  என்று  டிஏபி  பிரச்சாரப்  பிரிவுத்  தலைவர்  டோனி  புவா  கிண்டலடித்துள்ளார்.

சீனர்கள்  வணிகத்தில்  கொடிகட்டி  பறப்பதால்தான்  டிஏபி  பசிபிக்  மண்டல  வர்த்தகப்  பங்காளித்துவ  ஒப்பந்த(டிபிபிஏ)த்தை  ஆதரிக்கிறது  என  அப்துல்  ஹாடி  கூறியிருப்பதற்கு  புவா  இவ்வாறு  எதிர்வினை  ஆற்றினார்.

“அம்னோ  டிபிபிஏ-யை  ஆதரிக்கிறது. அப்படியானால்  அது  சீனர்  கட்சிதான்”, என்று  புவா  முகநூலில்  கிண்டலாகக்  குறிப்பிட்ட  புவா.

டிஏபி  என்றும்  டிபிபிஏ–யை  ஆதரித்தில்லை  என்பதை  வலியுறுத்திய  புவா,  அந்த  விவகாரத்துக்கு  இனச் சாயம்  பூச  முயல்வதாக  அப்துல்  ஹாடியைக்  கடுமையாக  சாடினார்.