லிபியாவில் கர்ணல் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து ஐ.நா.செய்தி தொடர்பாளர் மார்ட்டின் நெஸிர்கி கூறுகையில்; லிபியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா.பொது செயலாளர் பான் கீ மூன் முதலில் அங்குள்ள தேசிய கிளர்ச்சிப் படையினரை சந்தித்து பேசுகிறார்.
இந்த பேச்சுவார்த்தை லிபியாவை வலிமைமிக்க மற்றும் தொழில் முனைவோரின் ஒரு புதிய வர்த்தக தேசமாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை என்றார். இதனையடுத்து பான்கி மூன், பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக மார்ட்டின் தெரிவித்தார்.