பிரான்ஸ் எல்லையில் வசித்துவரும் அகதிகள் கலேஸ் துறைமுகத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில்கொண்டு அகதிகளுக்கு அந்நாட்டு கட்டுபாடு விதித்துள்ளது.
இதன் காரணமாக பிரித்தானியாவுக்கு செல்ல முடியாத அகதிகள் பிரான்ஸின் எல்லையோரத்தில் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த குடியிருப்பில் 2 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் இடதுசாரிகள் சார்பில் அகதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, 500க்கும் மேற்பட்ட அகதிகள் பொலிஸ் தடுப்பை தாண்டி கலேஸ்(Calais) துறைமுக பகுதிக்குள் புகுந்தனர்.
மேலும் 50க்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவுக்கு செல்லும் கப்பலில் ஏற முயற்சி செய்துள்ளனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீச்சியடித்தும் அவர்களை விரட்டியடித்தனர்.
இதன் காரணமாக துறைமுகம் மூடப்பட்டது.
இந்த சம்பவத்தால் சாலையில் ஏராளமான வாகனங்கள் அனிவகுத்து நின்றன.
இதையடுத்து யூரோ டனலும் மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பிரான்ஸ் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-http://world.lankasri.com





























