அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனி புயல் காரணமாக 17 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பனி பொழிந்து வருகிறது.
ஜொனாஸ்(Janas) என்று பெயரிடப்பட்டுள்ள பனி புயலின் காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது்
இந்த பனிபுயலுக்கு 17 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் 8700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கெண்டாக்கி பகுதியில் 35 மைல் தூர போக்குவரத்து நெரிசலில் சிக்கி 12 மணி நேரமாக வாகனங்கள் தவித்து வருகின்றன.
பனி பொழிவு தொடர்ந்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் 2 அடிக்கு பனி சேர்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் பகுதியில் 4 அடிக்கு பனி குவியலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அதிகாரிகளின் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 85 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
1 லட்சத்து 70 ஆயிரம் பேர்கள் வரை மின்சார வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பனியின் காரணமாக ஆயிரம் விபத்துக்கள் வரை ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://world.lankasri.com






























ஒபாமா நஜிப்பை போல ஒரு தரங்கெட்ட அமெரிக்க நாட்டு தலைவனாக இருப்பதால் அன்கேவும் இங்கே நடப்பது போல பல இயற்கை ஆவேசங்கள் நடைபெறுகிறது என்பதே உண்மை ,