எண்ணெய் கிணறுகளை தாக்கி அழித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்: 3 மில்லியன் பீப்பாய்கள் சேதம்

libya_attack_001லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் கிடங்குகள் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 5 எண்ணெய் கிடங்குகளின் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எண்ணெய் சேகரித்து வைத்திருக்கும் பகுதிக்கு திடீரென்று புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஏற்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் கடுமையாக திருப்பி தாக்கவே அங்கிருந்து தப்பிய தீவிரவாதிகள் தூரத்தில் இருந்து எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள 13 கிடங்குகளில் 5 எண்ணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5 கிடங்குகளில் இருந்தும் சுமார் 3 மில்லியன் பீப்பாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான கிடங்குகளில் தீயை கட்டுப்படுத்த ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தினசரி 1.6 மில்லியன் பீப்பாய்கள் வரை உற்பத்தி நடைபெற்று வந்த லிபியாவில் தற்போது வெறும் 4 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com