மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாது.
எஸ்ஆர்சி, ரிம2.6 பில்லியன் நன்கொடை மீதான விசாரணை அறிக்கைகளை முழுமையாக படித்துப் பார்த்து மனநிறைவு கொள்வதாக சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி கூறினார்.
“உண்மைகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து அரசுதரப்பு வழக்குரைஞரான நான் குற்றம் எதுவும் நிகழ்ந்திருப்பதாகக் கருதவில்லை.
“சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை எம்ஏசிசி-க்கே திருப்பி அனுப்பி மூன்று விசாரணைகளையும் முடித்துக்கொள்ளும்படி கூறப் போகிறேன்”, என அபாண்டி புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஹா ஹா ஹா ஹா -ஹோ ஹோ ஹோ.. வேறு என்ன?
அட போயா மாங்கா தலைய ? மலேசியா சட்ட ஒழுங்கு பற்றி உலகமே அறியும் , அதிலும் உங்கள் இனம் என்றால் பணத்தையும் , மதத்தையும் காண்பித்தால் எதனையும் செய்யலாம் என்பதை அனைவரும் நன்கு அறிவர் .
இதனையே மற்றவர் செய்திருந்தால் துள்ளி குதிபீர்களே சட்டம் நீதி நேர்மை என்று.உங்களது நேர்மை எந்த அளவுக்கு தூய்மையானது என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது.அடுத்த பொதுத்தேர்தல் தீர்ப்பு மக்கள் வழங்குவார்கள்.அதுவரையில் உங்கள் ஆட்டம் நூரு வகைதான்.