சவுதி அரேபியாவின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் அன்ஷாவில் அமைந்துள்ள ஷீயா பள்ளிவாயல் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததில் குறைந்த பட்சம் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிச்சத்தம் ஒன்றுடன் சுமார் ஐந்து ஆயுததாரிகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகியுள்ளனர், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயுத தாரிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இராணுவம் மற்றும் அவசர ஊர்தி உடனடியாக பள்ளிவாயலை சுற்றி வளைத்து பொதுமக்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
-http://world.lankasri.com