அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகை தர உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில் சென்று அங்கு பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய மக்களை அங்குள்ள பிரபல மசூதியில் சந்தித்துப் பேச அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகளாக சித்தரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும், நாட்டுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்த சந்திப்பு அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விரும்பிய மதங்களை கடைபிடிக்கும் பரிபூரண சுதந்திரம் அமெரிக்க மக்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான, ஒபாமாவின் இந்த சந்திப்பு அமையும் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருமுறை பதிவியேற்ற பின்னர் முதல் முறையாக மசூதிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com