20 ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை

isis_gainstanmerica_001ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் உள்ள இடங்களை ஈராக் படைகள் ஒவ்வொன்றாக மீட்டு வருகின்றனர். சமீபத்தில் ரமாதி நகர் மீட்கப்பட்டது.

தற்போது ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரை மீட்பதற்கு ஈராக் படைகள் தாக்குதலை தொடங்கி உள்ளன. அவர்களுக்கு உதவியாக அமெரிக்க கூட்டு படைகள் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் குண்டு வீசி தாக்கி வருகின்றன.

சிரியாவில் உள்ள ராக்கா நகர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகரமாக உள்ளது. இந்த நகரில் ரஷியா மற்றும் அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் அதை தாக்குபிடிக்க முடியாமல் ஏராளமான ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் நகருக்கு வந்தனர். இப்போது மொசூல் நகரில் நடக்கும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கின்றனர்.

சில தீவிரவாதிகள் படையில் இருந்தே வெளியேறும் திட்டத்துடன் தப்பி ஓடுகிறார்கள். இப்படி செய்பவர்களை தேடி பிடித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றுகிறார்கள்.

சமீபத்தில் படையில் இருந்த தீவிரவாதிகள் சிலர் மொசூல் நகரில் இருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 20 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் வரிசையாக நிறுத்தி தலையை துண்டித்து கொலை செய்தனர். பொதுமக்கள் மத்தியில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவல் அரபு பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மற்ற தீவிரவாதிகளும் இது போல படையில் இருந்து தப்புவதை தடுக்க இதுபோன்ற கொடூர தண்டனை நிறைவேற்றப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், பாரீஸ் நகரில் நடந்த தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலை லண்டன் நகரில் நடத்த போகிறோம். இதன் மூலம் இங்கிலாந்தை நிலைகுலைய செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

-http://www.athirvu.com

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 20 பேர் பலி!

afkan_attack_001ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின்  உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

தாலிபனுக்கு எதிரான கிளர்ச்சித் தடுப்பு பிரிவு அமைந்துள்ள தேசிய சிவில் ஒழுங்கு காவல்துறையின் தலைமையகத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த மாதத்தில் காபூலில் பல தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலில் கார் இருந்தப்படி இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது.

பின்னர் மக்களின் மத்தியில் இருந்த தீவிரவாதி ஒருவர் வெடிக்குண்டை வெடிக்க செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு   தாலிபன் இயக்கம்  பொறுப்பேற்றுள்ளது.

-http://world.lankasri.com